தவறாக சித்தரித்து காட்சிகள்..! “குஞ்சன் சக்சேனா, தி கார்கில் கேர்ள்” படத்துக்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு..!

12 August 2020, 5:39 pm
Gunjan_Saxena_UpdateNews360
Quick Share

தர்மா புரொடக்‌ஷனில் விரைவில் வெளியிடப்படவுள்ள “குஞ்சன் சக்சேனா, தி கார்கில் கேர்ள்” திரைப்படத்தில் இந்திய விமானப்படையின் பணி கலாச்சாரத்தை தவறாக சித்தரித்துள்ளதற்கு இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

தர்மா புரொடக்ஷன், நெட்ஃபிக்ஸ் மற்றும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) ஆகியவற்றுக்கு எழுதிய கடிதத்தில், திரைப்படம் மற்றும் டிரெய்லரில் சில காட்சிகள் மற்றும் உரையாடல்கள், “ஐ.ஏ.எஃப்’ஐ தேவையற்ற முறையில் எதிர்மறையாக சித்தரிப்பது கண்டறியப்பட்டது.” என தெரிவித்துள்ளது.

ஆரம்ப புரிதலின் படி, தர்மா புரொடக்ஷன்ஐஏஎஃப்’ஐ நம்பகத்தன்மையுடன் பிரதிநிதித்துவப்படுத்த ஒப்புக் கொண்டது மற்றும் அடுத்த தலைமுறை ஐஏஎஃப்அதிகாரிகளை ஊக்குவிக்க படம் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ஓடிடி முறையில் வெளியிடப்பட்டது என ஐஏஎஃப்தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனத்தின் தகவல்களின்படி, படம் புதன்கிழமை வெளியிடப்படுகிறது.

“முன்னாள் லெப்டினன்ட் குஞ்சன் சக்சேனா கதாபாத்திரத்தின் தன்மையை மகிமைப்படுத்தும் நோக்கில், தர்மா புரொடக்ஷன்ஸ் தவறாக வழிநடத்தும் சில சூழ்நிலைகளை முன்வைத்து, விமானப்படையின் பொருத்தமற்ற பணி கலாச்சாரத்தை குறிப்பாக பெண்களுக்கு எதிராக சித்தரிக்கிறது.” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஃப் அது ஆட்சேபகரமானதாகக் கருதும் காட்சிகள் மற்றும் உரையாடல்களின் சுருக்கத்தையும் பாலின சார்பின் தவறான விளக்கத்தையும் வழங்கியுள்ளது.

படத்தின் ஆட்சேபனைக்குரிய பகுதிகள் குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும், அவற்றை நீக்க அல்லது மாற்ற அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும், தயாரிப்பு நிறுவனம் காட்சிகளை நீக்கவில்லை. ஆனால் திரைப்படத்தின் காட்சிகளின் போது மறுப்பு அறிவிப்பை மட்டும் இணைத்துள்ளது” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐ.ஏ.எஃப் கருதுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் நெட்ஃபிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களை சிபிஎப்சி கட்டுப்படுத்த முடியாது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அவர்களுக்கு ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பைத் தயாரிக்க செயல்பட்டு வருகிறது. இந்த தளங்களுக்கான சுய ஒழுங்குமுறை வழிமுறைகளை மத்திய அரசு கவனித்து வருகிறது.

கடந்த மாதம், பாதுகாப்பு அமைச்சகம் மும்பையின் சிபிஎப்சிக்கு எழுதிய கடிதத்தில், திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களை தயாரிப்பவர்கள் இந்திய இராணுவத்தின் உருவத்தை சிதைப்பதை கவனத்தில் கொண்டு, தங்கள் திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து ஆட்சேபனை இல்லாத சான்றிதழைப் பெற வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆயுதப்படைகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 3,300’க்கு மேல் உள்ளது. இதில் ஐ.ஏ.எஃப்’இல் 1,300 பேர் உள்ளனர். 1992’ஆம் ஆண்டில் முதன்முறையாக மருத்துவ பணிகளைத் தவிர மற்ற பணிகளிலும் பெண்கள் சேர படிப்படியாக அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0