கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை : சென்னையை தேர்வு செய்தது ஐசிஎம்ஆர்..!

26 August 2020, 3:31 pm
Quick Share

இந்தியாவில் கோவிஷீல்ட் என அழைக்கப்படும் ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி சோதனை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

முன்னதாக இது குறித்து தகவல் அளித்திருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி செயல்திறன், சோதனைகள் முடிந்ததும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனைகள் முடிவடைந்துள்ளதால், அதை மனிதர்கள் உடலில் செலுத்தி ஆய்வு செய்ய ஐசிஎம்ஆர் முடிவு செய்துள்ளது. அதற்காக தமிழகத்தின் தலைநகர் சென்னையை ஐசிஎம்ஆர் தெர்வு செய்துள்ளது.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்த கொரோனா தடுப்பூசியானது, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

சுமார் 300 நபர்களின் உடலில் இந்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியானது செலுத்தி ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த தடுப்பூசியின் செயல்பாடு குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, இந்த தடுப்பூசியானது மனிதர்களின் உடலில் 14 நாட்களில் வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவும் எனவும், இது கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மனிதர்களின் உயிரை காப்பாற்ற உள்ளிருந்து போராடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், தடுப்பூசியை மலிவு மற்றும் மானிய விலையில் நாடு முழுவதும் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதி அளித்துள்ளார்.

Views: - 26

0

0