இண்டர்ன்ஷிப் பயிற்சிக்கு வந்த ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை : கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்..!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 10:11 pm
IAS Suspend - Updatenews360
Quick Share

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜார்கண்ட் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு முக்கிய துறையின் துணை ஆணையர் வீட்டில் இரவு நேர பார்ட்டி நடந்துள்ளது. அந்த பாட்டிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சையது ரியாஸ் அஹமது வந்துள்ளார். அதே போல ஐஐடி கல்லூரி மாணவி ஒருவரும் வந்துள்ளார்.

அவருக்கு சையது ரியாஸ் அஹமது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவி முக்கிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சையது ரியாஸ் அஹமது கைது செய்யப்பட்டார். இரண்டு வாரங்கள் நீதிமன்ற காவலில் தற்போது இருக்கிறார். இதனை அடுத்து அவரை சஸ்பெண்ட் (தற்காலிக பணியிடை நீக்கம்) செய்து ஜார்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.

Views: - 233

0

0