பொறுமையை இழந்த முதலமைச்சர் : கத்திரிக்கோல் வழங்க தாமதமானதால் ரிப்பனை வெறும் கையாலே கிழித்ததால் சர்ச்சை!!

5 July 2021, 10:52 am
NO Scissor Telangana CM- Updatenews360
Quick Share

தெலுங்கானா : அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா முதலமைச்சர் ரிப்பனை கத்திரிக்கோலால் வெட்டுவதற்கு பதிலாக கையால் கிழித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக இரட்டை படுக்கையறை கொண்ட வீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவுப் பெற்று சிர்சிலாவில் வீடுகளை பயனாளர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வந்த நிலையில், ரிப்பனை வெட்டுவதற்கான கத்திரிகோல் வழங்குவதற்கு அதிகாரிகள் மறந்து விட்டனர்.

அதை எடுத்து வருவதற்கும் தாமதமானதால், பொறுமை இழந்த முதல்வர் சந்திரசேகர ராவ், ரிப்பனை வெறும் கைகளால் கிழித்து விட்டு புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்குள் சென்றார்.

இது தொடர்பான வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் கத்திரிக்கோல் வழங்குவதற்குள் பொறுமை இழக்கலாமா என்றும், கையால் கிழித்தது குறித்தும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Views: - 222

0

0