மைசூர் பருப்பு மீதான இறக்குமதி வரி ரத்து : செஸ் வரியையும் குறைத்த மத்திய அரசு!!

Author: Udayachandran
27 July 2021, 2:07 pm
MYsore Dhal-Updatenews360
Quick Share

மைசூர் பருப்பு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ள மத்திய அரசு செஸ் வரியை குறைத்துள்ளது.

மசூர்தால் என அழைக்கப்படும் மைசூர் பருப்பு மீதான இறக்குமரி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அமெரிக்காவைத் தவிர பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யபப்டும் மைசூர் பருப்புக்கு இறக்குமதி வரி ரத்து பொருந்தும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு 30 சதவிகிதமாக இருந்த வரி தற்போது 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மைசூர் பருப்பின் விலை தற்போது 21 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

Views: - 178

0

0