தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஸ்ரீநகரில் முதன்முறையாக பெண் ஐஜி நியமனம்..! சிஆர்பிஎஃப் அதிரடி உத்தரவு..!

1 September 2020, 5:09 pm
Charu_Sinha_IPS_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகர் செக்டருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (ஐஜி) ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1996 தொகுதி தெலுங்கானா கேடரின் ஐ.பி.எஸ் அதிகாரி சாரு சின்ஹா இப்போது ஸ்ரீநகர் செக்டருக்கு சி.ஆர்.பி.எஃப்’இன் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக தலைமை தாங்க உள்ளார். இவ்வளவு கடினமான பணிக்கு அவர் நியமிக்கப்பட்டிருப்பது இது முதல் தடவையல்ல. முன்னதாக, சிஆர்பிஎஃப்பில் பீகார் செக்டரின் ஐ.ஜி.யாகவும், நக்சல்களுடன் போராடியராகவும் இருந்துள்ளார்.

அவரது தலைமையின் கீழ், பல்வேறு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், அவர் சிஆர்பிஎஃப்பில் ஸ்ரீநகர் செக்டரின் ஐஜியாக அவரை நியமிக்க புதிய உத்தரவு வந்தது.

தற்போதைய சிஆர்பிஎஃப் டைரக்டர் ஜெனரல் சிஆர்பிஎஃப் ஏபி மகேஸ்வரி 2005’ல் ஸ்ரீநகர் செக்டரில் பணியமர்த்தப்பட்டிருந்தார். எனினும் 2005’இல் செயல்படத் தொடங்கிய இந்த செக்டரில் ஐ.ஜி மட்டத்தில் ஒரு பெண் அதிகாரி இருந்ததில்லை. இந்த செக்டர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசாருடனும் இந்திய ராணுவத்துடனும் நெருக்கமாக செயல்படுகிறது.

“இதன் தலைமையகம் ஸ்ரீநகரின் ப்ரீன் நிஷாட்டில் அமைந்துள்ளது. இது 2005’ல் செயல்படத் தொடங்கியது. ஸ்ரீநகர் செக்டர் ஜம்மு காஷ்மீர்-புட்கம், கந்தர்வால் மற்றும் ஸ்ரீநகர் மற்றும் யூனியன் பிரதேசமான லடாக் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்பாட்டு அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.” என்று சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.

தற்போதைய நியமனம் மூலம் இந்த செக்டர் சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் சின்ஹா தலைமை தாங்குவார்.

Views: - 6

0

0