அசாமில் மதரசாக்கள் பொது பள்ளிகளாக மாற்றப்படும்: அமைச்சர் பிஸ்வா சர்மா அறிவிப்பு…!!!

17 October 2020, 5:20 pm
asam minister - updatenews360
Quick Share

கவுகாத்தி: அசாமில் மதரசாக்கள் பொது பள்ளிகளாக மாற்றப்படும் என அமைச்சர் பிஸ்வா சர்மா இன்று தெரிவித்து உள்ளார்.

அசாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அசாமில் வருகிற டிசம்பர் 1ந்தேதி முதல் விடுதிகள் திறக்கப்படும். வருகிற நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கூட்டம் அதிகம் கூடாமல் இருக்க இரு வேளைகளாக பிரித்து பள்ளி கூடங்கள் செயல்படுத்தப்படும். பெற்றோர் ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுத்து கொண்டால் அதற்கு அனுமதி அளித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று மதரசா வாரியம் கலைக்கப்படும். மதரசா கல்விக்கும் மற்றும் பொது கல்விக்கும் சம அளவிலான அந்தஸ்து வழங்கப்படும் என்று நாங்கள் வழங்கிய அறிவிப்பினை திரும்ப பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

அசாமில் நடத்தப்பட்டு வரும் அனைத்து மதரசாக்களும் இனி பொது பள்ளிகளாக நடத்தப்படும். இதனால் தனியார் மதரசாக்களை மூடுவது என்ற நோக்கம் அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

Views: - 14

0

0