கேரளாவில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 5,000 பேருக்கு தொற்று பாதிப்பு…!!

13 November 2020, 8:59 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியபோது அதனை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையிலும் குணமடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Corona Cbe - Updatenews360

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 804 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 77 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் தாக்குதலுக்கு இன்று 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் மொத்த எண்ணிக்கை
1,822 ஆக அதிகரித்துள்ளது.

Views: - 21

0

0