தீபாவளிக்கு முன் பள்ளிகள் திறக்கப்படாது: மராட்டிய பள்ளி கல்வி அமைச்சர்….!!!!

Author: Aarthi
11 October 2020, 3:02 pm
school-masks-updatenews360
Quick Share

புனே: மராட்டியத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்படாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் உள்ளது. இதுவரை 15.17 லட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.

நாட்டில் மிக அதிக அளவாக மராட்டியத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வரும் 15ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் மராட்டிய பள்ளி கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறும்பொழுது, தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் நிச்சயம் திறக்கப்படாது என்று தெரிவித்து உள்ளார்.

Views: - 48

0

0