டெல்லியில் 28 அடி உயர நேதாஜி சிலை திறப்பு : பாரதியார் பாடலை பறைசாற்றி பேசிய பிரதமர் மோடி!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2022, 10:06 pm
Modi Netaji - Updatenews360
Quick Share

டில்லியில் கர்தவ்யா பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அங்கு இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயர நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் திறந்து வைத்து சிலைக்கு மலர் தூவி மரியதை செலுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கர்தவ்யா பாதை திறந்து வைக்கப்பட்டது இந்தியாவின் புதிய அடையாளம். கர்தவ்யா பாதையை திறந்து வைத்ததன் மூலம் காலனி ஆதிக்க அடையாளங்கள் புறந்தள்ளப்பட்டு இந்தியா புதிய வரலாற்றை எழுதி உள்ளது. வலிமையான இந்தியாவை நோக்கி நாம் முன்னேறுகிறோம்.

இதன் மூம் ஆங்கில ஆதிக்கத்தை விட்டு விலகி புதிய இந்தியாவை காண்கிறோம். நேதாஜியின் வாழ்க்கை சாகசம் நிறைந்தது. நேதாஜியை தலைவர் உலகமே பாராட்டியது. நாடு சுதந்திரத்திற்கு பின் நேதாஜியை மறந்து விட்டனர். அவருடைய சிந்தனைகள், எண்ணங்கள் புறந்தள்ளப்பட்டுவிட்டது.

தேசிய கல்வி கொள்கையால் அந்நிய மொழியை கற்கும் கட்டாயத்தில் இருந்து இளைஞர்கள் விடுவிக்கப்படுவர். பொருளாதார நடவடிக்கைகள் புதிய உத்வேகம் பெற தடுப்பூசிகளம் உதவியதை உலக நாடுகள் பாராட்டியது. சென்டரல் விஸ்டா வை உருவாக்க பணியாற்றியவர்கள் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கருதப்படுவர்
இவ்வாறு அவர் பேசினார்.

கர்தவ்யா பாதை மற்றம் நேதாஜி சிலையை திறந்து வைத்து பிரதமர் பேசுகையில் பாரதியார் பாடலான பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாடலை மேற்கோள் காட்டி பேசினார். தொடர்ந்து பாரதியாரின் பாடல்களை அனைவரும் படிக்க வேண்டும். பாரதியின் பாடல்கள் எனக்கு பெருமை அளிக்கிறது என கூறினார்.

Views: - 422

0

0