ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை ரெய்டு : வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. சிக்கும் பிரபல மருத்துவர்கள்?

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2022, 9:30 am
aarthi Scan - Updatenews360
Quick Share

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, காஞ்சிபுரம், சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம், குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உட்பட பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதாக கூறப்படும் நிலையில், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் காரணமாக ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Views: - 564

0

0