இந்தியாவை மிரட்டும் ஒமிக்ரான் தொற்று: 27 மாநிலங்களில் 3,623 பேர் பாதிப்பு…மத்திய சுகாதாரத்துறை தகவல்..!!

Author: Aarthi Sivakumar
9 January 2022, 12:04 pm
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, அரியானா, ஒடிசா, உத்தரபிரதேசம், ஆந்திரா, உள்ளிட்ட 27 மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதில் மராட்டியம், டெல்லி, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள், ஒமைக்ரானின் மோசமான பாதிப்புக்குள்ளான முதல் 5 மாநிலங்கள் ஆகும்.

இந்நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை இந்திய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மராட்டிய மாநிலம் – 1,009 பேர், டெல்லி – 513 பேர், கர்நாடகா – 441 பேர், ராஜஸ்தான் – 373 பேர், கேரளா – 333 பேர், குஜராத் – 204 பேர், தமிழ்நாடு – 185 பேர், அரியானா – 123 பேர், தெலுங்கானா – 123 பேர், உத்தரபிரதேசம் – 113 பேர், ஒடிசா – 60 பேர், ஆந்திரா – 28 பேர், பஞ்சாப் – 60 பேர், மேற்கு வங்காளம் – 27 பேர், கோவா – 19 பேர், அசாம் – 9 பேர், மத்திய பிரதேசம் – 9 பேர், உத்தரகாண்ட் – 8 பேர், மேகாலயா – 4 பேர், அந்தமான், நிகோபார் தீவுகள் – 3 பேர், சண்டிகார் – 3 பேர், காஷ்மீர் – 3 பேர், புதுச்சேரி – 2 பேர், சட்டிஸ்கர் – 1, இமாச்சல பிரதேம் – 1, லடாக் -1, மணிப்பூர் – 1

மேலும் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 3,623 பேரில் இதுவரை 1,409 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Views: - 268

0

0