இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை!!

Author: Aarthi Sivakumar
9 January 2022, 2:26 pm
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 1 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை, ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.

தமிழகத்திலும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். மாலை 4.30 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Views: - 241

0

0