இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது..!

10 August 2020, 10:52 am

NEW DELHI, INDIA - MARCH 31: A bus driver in a protective suit before ferrying people who took part in a Tablighi Jamaat function earlier this month to a quarantine facility amid concerns of infection, on day 7 of the 21 day nationwide lockdown imposed by PM Narendra Modi to check the spread of coronavirus, at Nizamuddin West on March 31, 2020 in New Delhi, India. (Photo by Ajay Aggarwal/Hindustan Times via Getty Images)

Quick Share

சீனாவில் தொடங்கி உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவிலும் தனது உச்சகட்ட ஆட்டத்தை காட்டி வருகிறது.

நாட்டின், மிக முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று கோரதாண்டவம் ஆடி வருகிறது. இருப்பினும் பிற நாடுகளை ஒப்பிடுகையில், மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில், இந்தியாவில் குணமடைவோர் சதவீதம் அதிகரித்தும், உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்தும் காணப்படுகிறது.

இந்த சூழலில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வரை, 22,15,075 ஆக உயர்ந்துள்ளது. 44,386 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 15,35,744 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,994 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது இதில் நேற்று 119 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,927 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,020 பேர் குணமடைந்து மொத்தம் 2,38,638 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 12,248 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,15,332 ஆகி உள்ளது நேற்று 390 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,757 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 13,348 பேர் குணமடைந்து மொத்தம் 3,51,710 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,300 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,427 ஆகி உள்ளது இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,111 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,225 பேர் குணமடைந்து மொத்தம் 1,30,687 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.