பாகிஸ்தானுடன் அமைதியையே இந்தியா விரும்புகிறது..! மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை..!

25 February 2021, 9:54 pm
Indian_Army_UpdateNews360
Quick Share

இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகள் தங்களது அனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், பாகிஸ்தானுடனான வழக்கமான உறவுகளை இந்தியா விரும்புகிறது என்றும், அனைத்து பிரச்சினைகளையும் இருதரப்பிலும் அமைதியான முறையில் தீர்க்க உறுதிபூண்டுள்ளது என்றும் கூறினார்.

“முக்கிய விஷயங்களில், எங்கள் நிலைப்பாடு மாறாமல் உள்ளது. அதை மீண்டும் கூற வேண்டும் என்ற அவசியமில்லை.” என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இன்று செய்தியாளர்களிடம் ஒரு வீடியோ கான்பெரன்ஸ் ஊடக மாநாட்டில் கூறினார்.

அவரது கருத்துக்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ செயற்பாட்டு இயக்குநர்கள் (டிஜிஎம்ஓக்கள்) இடையே நடந்த ஒரு ஹாட்லைன் கலந்துரையாடலின் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் எல்லையில் அமைதி நிலவுவது தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க ஒப்புக் கொண்டனர். 

இது குறித்து கேட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், “டிஜிஎம்ஓக்களின் கூட்டு அறிக்கை மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து, நான் உங்களை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரைப்பேன்” என்றார்.

“பாகிஸ்தானுடனான உறவுகள் குறித்து, நாங்கள் முன்பு கூறியது போல், இந்தியா பாகிஸ்தானுடனான சாதாரண அண்டை நாட்டு உறவுகளை விரும்புகிறது. அமைதியான மற்றும் இருதரப்பு முறையில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று அவர் கூறினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் 2003’ல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இது ஒப்பந்தத்தை கடைபிடிப்பதை விட அதிக மீறல்களுடன் கடந்த பல ஆண்டுகளாக உண்மையாக பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0