கார்பன் மாசுக்களை பெருமளவில் குறைத்து வரும் இந்தியா..! பெட்ரோலிய பல்கலைக்கழக மாநாட்டில் மோடி உரை..!

21 November 2020, 2:08 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

கார்பன் மாசுக்களை 30 முதல் 35 சதவீதம் வரை குறைக்கும் இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

பண்டிட் தீன்தயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் மாநாட்டு விழாவில் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் உரையாற்றிய அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது :- “இன்று, நம் நாடு கார்பன் மாசுபாட்டை 30 முதல் 35 சதவிகிதம் குறைக்கும் இலக்கைக் கொண்டு முன்னேறி வருகிறது. இதை நான் உலகுக்குச் சொன்னபோது, ​​அது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. இந்தியா அதை அடைய முடியுமா என்று ஆச்சரியப்பட்டார்கள்.

இந்த பத்தாண்டு காலத்தில் இயற்கை எரிவாயு திறனின் பயன்பாட்டை நான்கு மடங்கு அதிகரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரட்டிப்பாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

எரிசக்தி துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வலுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்காக ஒரு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களிடம் ஏதேனும் யோசனை, தயாரிப்பு அல்லது ஒரு கருத்து இருந்தால், இந்த நிதி உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும், அரசாங்கத்தின் பரிசாகவும் இருக்கும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மட்டும், வரக்கூடிய பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்தத் துறையில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.”

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Views: - 0

0

0

1 thought on “கார்பன் மாசுக்களை பெருமளவில் குறைத்து வரும் இந்தியா..! பெட்ரோலிய பல்கலைக்கழக மாநாட்டில் மோடி உரை..!

Comments are closed.