சீனாவுக்கு செக்..! லடாக்கில் மூலோபாய இடங்களைக் கைப்பற்றியது இந்தியா..!

3 September 2020, 10:33 am
India_China_Ladakh_UpdateNews360
Quick Share

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பிங்கர் 4 மற்றும் பிங்கர் 5 ஆகியவற்றின் மலைப்பகுதிகளில் இந்தியா தற்போது வலுவான நிலையில் உள்ளது. சீனப் படையினரை விட அதிகமான இந்திய வீரர்கள் இருப்பதால், கடந்த ஆகஸ்ட் 29-30 இரவு, 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் பலமுறை அத்துமீற முயன்றும் சீன இராணுவம் தோல்வியுற்றது.

இதற்கிடையில், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு சில நாட்களுக்குப் பின்னர், இப்பகுதியில் நிலைமை நேற்று மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டியது. அதே நேரத்தில் இரு தரப்பிலிருந்தும் இராணுவத் தளபதிகள் பதட்டங்களைத் தணிக்க மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

பாங்கோங் ஏரி பகுதியில் பதட்டங்களைக் குறைப்பதை மையமாகக் கொண்டு இரு நாடுகளின் இராணுவமும் சுஷூலில் பிரிகேட் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இதேபோன்ற உரையாடலை நடத்தி எந்த தீர்வையும் எட்டாத நிலையில்நேற்றைய கூட்டமும் முடிவில்லாமல் முடிந்தது என கூறப்படுகிறது.

இதற்கிடையே தற்போதைய சீன நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுத்த இந்தியா, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பல மலை உச்சிகளையும் இடங்களையும் ஆக்கிரமிப்பதன் மூலம் கிழக்கு லடாக்கில் கடந்த சில நாட்களில் இந்தியா தந்திரோபாய லாபங்களை அடைந்துள்ளது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திங்களன்று, இந்திய இராணுவம் ஆகஸ்ட் 29 மற்றும் 30 இரவு பாங்கோங் ஏரியின் தென் கரையில் நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற சீனா ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இந்திய இராணுவம் கூறியது. ஆனால் இந்த முயற்சி இந்திய துருப்புக்களால் முறியடிக்கப்பட்டது .

பாங்கோங் ஏரி பகுதியில் நிலைமையை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து இரு தரப்பினரின் கள தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது, திங்களன்று சீன ராணுவம் மீண்டும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0