இந்தியா இனிமேல் ஜனநாயக நாடு கிடையாதா..? ஷாக் கொடுத்த ராகுல் காந்தி..!

Author: Sekar
11 March 2021, 4:49 pm
Rahul_Gandhi_UpdateNews360
Quick Share

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா இனி ஒரு ஜனநாயக நாடு அல்ல என்று கூறியுள்ளார்.

“இந்தியா இனி ஒரு ஜனநாயக நாடு அல்ல” என்று ராகுல் காந்தி தனது ட்வீட்டில் ஒரு செய்தி கிளிப்பைப் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார். அதில் இந்தியா இப்போது பாகிஸ்தானைப் போலவே எதேச்சதிகாரமாக உள்ளது என்றும் பங்களாதேஷை விட மோசமான நிலையில் உள்ளது என்றும் ஸ்வீடன் நிறுவனத்தின் ஜனநாயக அறிக்கை வெளியிட்ட செய்தியை பகிர்ந்து இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.

அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள், வேளாண் சட்டங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து அரசாங்கத்தை குறிவைத்து விமர்சித்து வருகிறார். வரி சம்பாதிப்பதற்காக மோடி அரசாங்கம் விலை உயர்வின் மூலம் மக்களை துன்பத்தில் தள்ளுவதாக ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, மார்ச் 5’ஆம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தின் 100’வது நாளில், எந்தவொரு சூழ்நிலையிலும் மூன்று விவசாய சட்டங்களை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். “விதைகளை விதைத்தபின் பொறுமையாக காத்திருப்பவர்கள், பல மாதங்கள் காத்திருப்பு என்றாலும் சரி, மோசமான வானிலை என்றாலும் சரி எதற்கும் பயப்படுவதில்லை. எனவே மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்” என்று ராகுல் காந்தி இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

பிப்ரவரி 11’ஆம் தேதி மக்களவையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட அவர், இந்த சட்டங்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்பு முறையை சேதப்படுத்தும் என்றும் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் என்றும், நாட்டை நான்கு பேர் மட்டுமே நடத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

Views: - 71

0

0