பிலிப்பைன்ஸுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை..! சீனாவை எதிர்கொள்ள இந்தியா அதிரடி முடிவு..!

12 November 2020, 5:35 pm
Brahmos_Missile_UpdateNews360
Quick Share

அடுத்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே இடையே திட்டமிடப்பட்ட உச்சிமாநாட்டின் போது பிரம்மோஸ் கப்பல் ஏவுகணை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவும் பிலிப்பைன்ஸும் முயன்று வருகின்றன. இதன் மூலம் இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை பெரும் மூன்றாவது நாடாக பிலிப்பைன்ஸ் மாறுகிறது.

பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் முதல் நில அடிப்படையிலான ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் மீதமுள்ள ஏவுகணையின் பேட்டரி அமைப்பு உள்ளிட்ட சில சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, டெல்லியை தளமாகக் கொண்ட இந்தியா-ரஷ்யா கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் குழு டிசம்பர் மாதத்திற்குள் மணிலாவுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மோடி மற்றும் டூர்ட்டே இடையேயான உச்சிமாநாட்டிற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், கூட்டம் பிப்ரவரியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பாதுகாப்புத்துறை மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும் பிலிப்பைன்ஸும் ஆரம்பத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது பிரம்மோஸ் ஒப்பந்தத்தை உள்ளடக்கியிருக்கும். இருதரப்பு வெளியுறவு அமைச்சர்களிடையே கடந்த நவம்பர் 6 அன்று இந்த கூட்டம் திட்டமிடப்பட்டது. ஆனால் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இது கையெழுத்தாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ரஷ்யாவின் துணைத் தூதர் ரோமன் பாபுஷ்கின், இந்தியாவும் ரஷ்யாவும் பிரம்மோஸின் வரம்பை படிப்படியாக அதிகரிக்கவும், ஏவுகணையை பிலிப்பைன்ஸில் தொடங்கி இதர நாடுகளுக்கும் ​​ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளன என்று கூறினார்.

பிலிப்பைன்ஸ் மட்டுமல்லாது இதர தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும், பிரம்மோஸ் ஏவுகணை பரிமாற்றம் குறித்து இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எல்லையில் சீனாவுடன் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடனான சீனாவின் மோதல் போன்றவற்றின் காரணமாக, இந்தியா பிரம்மோஸ் ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

Views: - 27

0

0