ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியல் வெளியீடு..! ஆறு இடங்கள் பின்தங்கிய இந்தியா..!

29 January 2021, 11:10 am
Bribe_UpdateNews360
Quick Share

180 நாடுகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 2020’ஆம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரவரிசை ஆறு இடங்கள் குறைந்து 86’வது இடத்திற்கு வந்துள்ளது.

2020’ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வுக் குறியீடு (சிபிஐ) எனும் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை சர்வதேச கண்காணிப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நேற்று வெளியிட்டது.

வல்லுநர்கள் மற்றும் வணிக நபர்களின் கூற்றுப்படி 180 நாடுகளையும் பிராந்தியங்களையும் பொதுத்துறை ஊழலின் அளவைக் கொண்ட இந்த குறியீடு, 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகிறது. அங்கு 0 மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் 100 மிகவும் சுத்தமாகவும் இருக்கிறது.

இந்தியா, 180 நாடுகளில் 40 மதிப்பெண்களுடன் தரவரிசையில் 86’ஆவது இடத்தில் உள்ளது.

“2019’ஆம் ஆண்டில் 180 நாடுகளில் இந்தியா 80’வது இடத்தில் இருந்தது. இந்தியாவுக்கான சிபிஐ மதிப்பெண் இந்த ஆண்டிலும் முந்தைய ஆண்டிலும் ஒரே அளவில் உள்ளது.” என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

ஊழல் குறியீட்டில் இந்தியா இன்னும் மிகக் குறைவாக இருக்கலாம் என்று கூறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்,  சிபிஐ எந்த நாட்டிலும் உண்மையான ஊழல் அளவை பிரதிபலிக்கவில்லை என்று நிபுணர்கள் கருதுவதையும் குறிப்பிட்டது. ஒருமைப்பாடு மதிப்பெண் ஒரு நாட்டின் ஊழல் நிலைமையை தீர்மானிக்கிறது என அது மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு, நியூசிலாந்து மற்றும் டென்மார்க் 88 மதிப்பெண்களுடன் இந்த பட்டியலில் ஊழல் மிகவும் குறைந்த நாடுகளாக, பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. சோமாலியா மற்றும் தெற்கு சூடான் 12 மதிப்பெண்களுடன் இந்த பட்டியலில் 179’வது இடத்தில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளன.

Views: - 2

0

0