அணு ஆயுத திறன் கொண்ட சௌரியா ஏவுகணை சோதனை வெற்றி..! டிஆர்டிஓ அசத்தல்..!

By: Sekar
3 October 2020, 2:39 pm
Shaurya_Missile_Updatenews360
Quick Share

ஒடிசாவில் பாலசோரில் அணு ஆயுத திறன் கொண்ட சௌரியா ஏவுகணையின் வானத்திலிருந்து வான்வெளியில் இருந்து வரும் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் மேம்பட்ட பதிப்பை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இன்று சோதனை செய்யப்பட்ட சௌரியா ஏவுகணை சுமார் 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும். மேலும் தற்போதுள்ள ஏவுகணை அமைப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இருக்கும்.

இது இலகுவாகவும் செயல்பட எளிதாகவும் இருக்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதி கட்டத்தில், ஏவுகணை அதன் இலக்கை நெருங்கும் போது ஹைபர்சோனிக் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கபப்ட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சீனாவுடனான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சமீபத்தில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவது அனைவரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

லேசர் மூலம் இயங்கும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை மற்றும் பிரமோஸின் மேம்பட்ட பதிப்பு என இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்புகள் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எந்தவித அசாதாரண சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத்தான் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 62

0

0