எல்லையில் அத்துமீறல்..! பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை அழைத்து கண்டித்தது இந்தியா..!

15 November 2020, 10:24 am
Security_Personnel_Kashmir_UpdateNews360
Quick Share

தீபாவளியின் போது ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி பல இடங்களில், பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பாக,பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பாகிஸ்தானிய படைகளால் அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைப்பதை வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளதுடன், ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பதற்கும் வன்முறைகளைச் செய்வதற்கும் இந்தியாவில் நடக்கும் ஒரு பண்டிகை சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் தேர்வு செய்தது மிகவும் வருந்தத்தக்கது என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பாளர்கள் இன்று வெளிவிவகார அமைச்சகத்தால் வரவழைக்கப்பட்டனர். நவம்பர் 13’ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டில் பல செக்டர்களில்பாகிஸ்தான் படைகள் மேற்கொண்ட அறிவிக்கப்படாத யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்பாக பலத்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் விளைவாக நான்கு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 19 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.” என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான், வடக்கு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுப் பகுதியில் பல பகுதிகளில் பலத்த ஷெல் தாக்குதல்களை நடத்தியது. பொதுமக்களைத் தவிர ஐந்து பாதுகாப்புப் படையினர் இதனால் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

“இந்திய பொதுமக்கள் மீது பீரங்கி மற்றும் மோட்டார் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டில் ஒருங்கிணைந்த துப்பாக்கிச் சூடு மூலம் சமாதானத்தை சீர்குலைப்பதற்கும், ஜம்மு காஷ்மீரில் வன்முறைகளைச் செய்வதற்கும் பாகிஸ்தான் இந்தியாவில் ஒரு பண்டிகை நிகழ்வைத் தேர்ந்தெடுத்தது மிகவும் வருந்தத்தக்கது” என்று அது கூறியது.

தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு பிரதேசத்தையும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்காத இருதரப்பு உறுதிப்பாட்டை வெளியுறவு அமைச்சகம் அதில் நினைவூட்டியது.

Views: - 21

0

0

1 thought on “எல்லையில் அத்துமீறல்..! பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை அழைத்து கண்டித்தது இந்தியா..!

Comments are closed.