அமெரிக்காவை விஞ்சியது இந்தியா..! உலகின் மிக வேகமாக தடுப்பூசி போடும் நாடாக உருவெடுத்தது..!

7 April 2021, 2:52 pm
VACCINE_UpdateNews360
Quick Share

சராசரியாக தினசரி 30,93,861 தடுப்பூசி அளவுகளுடன் உலகின் மிக வேகமாக கொரோனா தடுப்பூசி போடும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தினசரி தடுப்பூசி போடுவதில் இந்தியா அமெரிக்காவை விஞ்சியுள்ளது.

ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8.70 கோடியைத் தாண்டியுள்ளது.

ஒட்டுமொத்த அறிக்கையின்படி, 13,32,130 அமர்வுகள் மூலம் 8,70,77,474 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களில் முதல் டோஸ் டோஸ் எடுத்த 89,63,724 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 2’வது டோஸ் எடுத்த 53,94,913 சுகாதாரப் பணியாளர்கள், முதல் டோஸ் பெற்ற 97,36,629 முன்னணி தொழிலாளர்கள், 2’வது டோஸ் எடுத்த 43,12,826 முன்னணித் தொழிலாளர்கள் அடங்குவர்.

தவிர, 60 வயதுக்கு மேற்பட்ட 3,53,75,953 மற்றும் 10,00,787 பயனாளிகளுக்கு முறையே 1 மற்றும் 2 வது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 45 முதல் 60 வயதுடைய 2,18,60,709 மற்றும் 4,31,933 பயனாளிகளுக்கு முறையே 1 மற்றும் 2 டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டன. இதில், 30,08,087 பயனாளிகளுக்கு 41,396 அமர்வுகளில் முதல் டோஸுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 3,29,514 பயனாளிகள் 2 வது டோஸ் தடுப்பூசி பெற்றனர்.

இந்தியாவின் தினசரி புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும் 24 மணி நேரத்தில் 1,15,736 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் தினசரி புதிய பாதிப்புகளில் 80.70 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

Views: - 47

0

0