“அபிநந்தன் மட்டும் விடுவிக்கப்படாமல் இருந்திருந்தால்..”..! ராணுவ தாக்குதல் குறித்து மனம் திறந்த முன்னாள் இந்திய விமானப்படைத் தளபதி..!

29 October 2020, 2:54 pm
dhanoa_abhinandan_updatenews360
Quick Share

காஷ்மீரில் நடந்த ஒரு விமான சண்டையில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானை பிப்ரவரி 2019’இல் விடுவிப்பதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என்று முன்னாள் ஐ.ஏ.எஃப் தலைவர் பி.எஸ்.தனோவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அவர், இந்தியாவின் திறனை பாகிஸ்தான் நன்கு அறிந்திருப்பதாகவும், பாகிஸ்தானின் முன்னோக்கிய படையணிகளை அழிக்க இந்திய ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்றும் கூறினார்.

“அபிநந்தனை விடுவிக்க இரண்டு திட்டங்கள் இருந்தன. பாகிஸ்தானுக்கு இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியான அழுத்தம் கொடுப்பது முதல் திட்டமாக இருந்தது. ஆனால் ஒரு இராணுவ நடவடிக்கையும் திட்டமிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் எம்.பி. அயாஸ் சாதிக் ஜெனரல் பாஜ்வாவின் கால்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்ததாக கூறியது உண்மை தான். ஏனெனில் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் ஒன்றிணைந்து ராணுவ தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானுக்கு மிகவும் ஆபத்தானது.” என்று ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.

“பிப்ரவரி 27 அன்று அவர்கள் எங்கள்நிலைகளைத் தாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. நாங்கள் அவர்களின் படையினரை அழிக்கக்கூடிய நிலையில் இருந்தோம். எங்கள் திறனை அவர்கள் அறிவார்கள்.

அடிப்படையில், நாங்கள் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்ற இந்த விஷயம் அவர்களின் மனதில் இருந்தால், அவர்கள் முதலில் அவர்களது சொந்த இராணுவம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்பார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் பிரபலமான கூற்றான ‘மென்மையாகப் பேசுங்கள், ஆனால் ஒரு பெரிய குச்சியை எடுத்துச் செல்லுங்கள்’ என்று சொல்வது தான் உண்மை. இந்தியாவின் பெரிய குச்சியாக இராணுவம் இருந்தது.” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட பதற்றத்தை பி.எம்.எல்-என் தலைவர் அயாஸ் சாதிக் விவரித்த ஒரு நாள் கழித்து முன்னாள் ஐ.ஏ.எஃப் தலைவரின் கருத்து வந்துள்ளது.

பி.எம்.எல்-என் அரசாங்கத்தின் போது பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருந்த சாதிக், பாராளுமன்றத்தில், வெளியுறவு அமைச்சர் குரேஷி ஒரு முக்கியமான கூட்டத்தில் அபிநந்தன் விடுவிக்கப்படாவிட்டால், இந்தியா பாகிஸ்தானை அன்று இரவு 9 மணிக்கு தாக்கும் என்று கூறியதாக தெரிவித்து பரப்பரப்பைக் கூட்டியது குறிப்பிடத்தக்கது.

Views: - 28

0

0

1 thought on ““அபிநந்தன் மட்டும் விடுவிக்கப்படாமல் இருந்திருந்தால்..”..! ராணுவ தாக்குதல் குறித்து மனம் திறந்த முன்னாள் இந்திய விமானப்படைத் தளபதி..!

Comments are closed.