#IndiaAgainstPropaganda : வெளிநாட்டு பிரபலங்களின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுத்த பாலிவுட் பிரபலங்கள்..!
3 February 2021, 5:58 pmகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா டன்பெர்க், பாலியல் பட நடிகை மியா கலீஃபா மற்றும் பாப் இசைப்பாடகி ரிஹானா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் மற்றும் தலைவர்கள், புதிய விவசாய சட்டங்கள் தொடர்பாக இந்தியாவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும், இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இந்த கருத்துக்களுக்கு கங்கனா ரனவத் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இன்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் மற்றும் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் #IndiaTogether மற்றும் #IndiaAgainstPropaganda என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு பிரபலங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாராளுமன்றத்தில் முழு விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்குப் பின்னர் விவசாய சீர்திருத்தங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவாவின் குறிப்பை ட்விட்டரில் பகிர்ந்த அக்ஷய் குமார், “விவசாயிகள் நம் நாட்டின் மிக முக்கியமான பகுதியாக உள்ளனர். மேலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. வேறுபாடுகளை உருவாக்கும் எவருக்கும் கவனம் செலுத்துவதை விட, ஒரு இணக்கமான தீர்மானத்தை ஆதரிப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
சுனில் ஷெட்டி இதைப் பின்பற்றி, அரை உண்மையை விட ஆபத்தான ஒன்றும் இல்லை என்று ட்வீட் செய்தார். “பாதி உண்மையை விட ஆபத்தானது எதுவுமில்லை என்பதால், நாம் எப்போதும் விஷயங்களைப் பற்றிய விரிவான பார்வையை எடுக்க வேண்டும்.” என்று கூறினார்.
அஜய் தேவ்கன் தனது ஆதரவாளர்களை நோக்கி, இந்தியா அல்லது இந்தியக் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு தவறான பிரச்சாரத்திலும் விழுந்துவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே விவசாயிகள் படுகொலை என மிகவும் மோசமான உண்மைக்குப் புறம்பான ஹேஷ்டாக்குகள் ட்விட்டரில் பரவி வரும் நிலையில், இந்திய சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் இது போன்றவற்றை அனுமதித்தால், சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
0
0