எல்லையில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை தகர்த்தெறிந்த இந்திய ராணுவம்..! ஆயுதக் குவியலும் மீட்பு..!

1 September 2020, 4:27 pm
Weapons_Seized_Indian_Army_UpdateNews360
Quick Share

இந்திய இராணுவத்தின் சினார் கார்ப்ஸ், பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் செக்டரில் உள்ள பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஒரு கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தை ஆகஸ்ட் 30’ஆம் தேதி கண்டறிந்து பல மறைவிடங்களை தகர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அங்கிருந்து ஒரு பெரிய ஆயுதக் குவியல் மற்றும் வெடிமருந்துகளையும் மீட்டுள்ளனர்.

எல்லையில் போர் போன்ற சமயங்களில் மேற்கொள்ளப்படும் தற்காலிக சேமிப்பைப் போன்று விட்டு விடுவது அவர்களின் வாடிக்கையாகும். பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய நிலப்பகுதிக்கு, ஸ்லீப்பர் செல் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது என்று சினார் கார்ப்ஸ் தெரிவித்துள்ளது.

“பாதகமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக, ஊடுருவல் முயற்சிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கட்டம் கட்டப்பட்டிருந்தது. இதுபோன்ற எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க இரவு முழுவதும் கண்காணிப்பு தொடர்ந்தது.” என்று கூறினார்.

மேலும், இத்தகைய முயற்சிகள் பாகிஸ்தான் இராணுவத்தின் தீவிர ஒத்துழைப்புடன் ஜம்மு காஷ்மீருக்குள் ஆயுதங்களை ஊடுருவுவதற்கான பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களின் விரக்தியை அம்பலப்படுத்துகின்றன என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அடுத்த நாள் ஆகஸ்ட் 31 அன்று, ஏழு மணிநேர விரிவான தேடலுக்குப் பிறகு, ராம்பூர் செக்டரில் இரண்டு மறைவிடங்களில் நன்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களிலிருந்து ஒரு பெரிய ஆயுத குவியல் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

Views: - 11

0

0