காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் பறிமுதல்

Author: Udhayakumar Raman
23 September 2021, 8:38 pm
Quick Share

காஷ்மீரின் ஊரி பகுதி அருகே 3 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

காஷ்மீர் எல்லைப்பகுதியிலுள்ள ராம்பூர் அருகே காடுகள் நிறைந்த பகுதியில் 6 தீவிரவாதிகள் அடங்கிய குழு ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் கண்டறிந்தது. அவர்களை சுற்றிவளைத்து தாக்கியதில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற மூன்று பேர் காட்டுக்குள் ஓடி தப்பிவிட்டதாகவும், அவர்களை தேடும்பணி தற்போது நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது. அவர்களிடமிருந்து 5 ஏகே ரக துப்பாக்கிகள், 8 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 70 கையெறி குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

மேலும் ஒரு தீவிரவாதியிடம் பாகிஸ்தான் நாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய்த் தாள்கள் இருந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர். குளிர்காலத்திற்கு முன்பாக இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அங்கு பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே செப்டெம்பர் 18ஆம் தேதி இதுபோன்ற ஊடுருவல் முயற்சி நடந்ததாகவும், அதை ராணுவத்தினர் முறியடித்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

Views: - 148

0

0