தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்..!

12 August 2020, 10:00 am
Quick Share

புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த தூப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த சூழலில், இந்திய ராணுவ வீரர்கள் அங்குள்ள எல்லை பகுதிகளில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். சுதாரித்துக்கொண்ட ராணுவத்தினர் தீவிரவாதிகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் புல்வாமா மாவட்டம் மற்றும் இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது.

Views: - 5

0

0