‘வங்கி கடனை திருப்பி செலுத்த கால அவகாசம்’ – ரிசர்வ் வங்கியின் நிலைபாடு..?
29 August 2020, 3:37 pmவங்கி தவணை அவகாசம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைவுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் வங்கியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் மழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சிறு குறு தொழில்கள் என அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது.
ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சாதாரண வாழ்கையை கூட நெருக்கடியுடன் கொண்டு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், வணிக ரீதி மற்றும் தனிப்பட்ட முறையில் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், கடந்த 6 மாத காலம் வழங்கப்பட்ட வங்கி தவணை அவகாசம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாசிடம் வங்கியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதில், வங்கி கடனை திருப்பி செலுத்த இனியும் கால அவகாசம் வழங்கினால், கடனை திருப்பி செலுத்துவதில் சிறமம் ஏற்படும் என கூறியுள்ளனர். அதேபோல், இந்த சூழலை பயன்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.
இதனால், அடுத்த மாதத்தில் இருந்து கடனை திருப்பி செலுத்தும் முறை பழயநிலமைக்கு செல்லும் எனவும், தவணை அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.