போதை மருந்து கடத்தியதாக நேபாள போலீசார் துப்பாக்கிச்சூடு: இந்திய விவசாயி சுட்டுக் கொலை…!!

6 March 2021, 9:40 am
nepal gunshot - updatenews360
Quick Share

பிலிப்பட்: போதை மருந்து கடத்தியதாக நேபாள போலீசார் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் இந்திய விவசாயி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச எல்லையில் வியாழக்கிழமை நேபாள போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்தார். நேபாள போலீசார் நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கூறியதாகக் கூறப்படுகிறது.

சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயியின் உடல் நேபாளத்தால் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை, அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் கோவிந்தா சிங்,குர்மேஜ் சிங்(30) ,ரேஷாம் சிங்(22), பப்பு சிங்( 26 ) ஆகிய 4 பேர் இந்தியா-நேபாள எல்லையில் உஷின் பிலிபிட்டில் பூமிடான் கிராமத்தின் கரும்பு வயல்களில் வேலைபார்த்து கொண்டு இருந்தனர் அப்போது அங்குவந்த நேபாள போலீசார் அவர்களை நோக்கி சுட்டு உள்ளனர். இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் காயம் அடைந்தனர்.

குர்மேஜ் சிங் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜின் மருத்துவக் கல்லூரியில் வயிறு மற்றும் வலது காலில் காயங்களுடன் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரேஷம் மற்றும் பப்பு ஆகிய இருவர் காயமடையவில்லை, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிலிபிட் எஸ்பி ஜெய் பிரகாஷ் யாதவ் கூறும் போது நேபாள போலீசார் வேறுபட்ட கதையை கூறுகின்றனர். நான்கு இந்தியர்களும் போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாக நேபாள போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். தடுத்து நிறுத்தியபோது, ​​அவர்கள் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர் – நேபாளத்தின் எல்லைக்குள் சுமார் 200 மீட்டர் முன்னேறி உள்ளனர். பதிலடி மற்றும் தற்காப்புக்காக நேபாள போலிசார் சுட்டதாக கூறுகிறார்கள். போதை மருத்து கைபற்றப்பட்டதற்கான எந்த தகவலும் இதுவரை இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் நேபாள அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 1

0

0