அரபிக் கடலில் விழுந்த கடற்படை பயிற்சி விமானம்…!!

27 November 2020, 11:02 am
flight - updatenews360
Quick Share

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்திய கடற்படையின் பயிற்சி விமானமான மிக்-29கே ரக விமானத்தில் நேற்று 2 விமானிகள் அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணித்த ஒரு விமானி மீட்கப்பட்டதாகவும், மற்றொரு விமானியை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படையின் கோவா தளத்தில் 40 மிக்-29 கே ரக போர் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலிலிருந்து இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0