திருப்பதியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு : பக்தர்கள் அச்சம்

30 August 2020, 5:22 pm
Tirupati Python- Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி மலையில் பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த காட்டேஜ் அருகே மரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.

திருப்பதி மலையில் கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தேவஸ்தான தங்கும் அறைகள் உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள மரம் ஒன்றின் மீது சுமார் 10 அடி நீளம் உள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று இன்று மாலை காணப்பட்டது.

மலைப்பாம்பு இருப்பது பற்றிய தகவல் அறிந்த ஊர் மக்கள், பக்தர்கள் ஆகியோர் அதனை பார்ப்பதற்காக திரண்டனர். அங்கு வந்த போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி வனத்துறையினரை வரவழைத்தனர்.

மிக நீண்ட முயற்சிக்கு பின் மரக்கிளையில் இருந்து மலைப்பாம்பை இறங்க செய்த வனத்துறையினர் அதனை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். 10 அடி நீள மலைப்பாம்பு மரத்தில் இருந்த சம்பவம் பக்தர்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

Views: - 10

0

0