பிரிட்டிஷ் கால நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்த ரயில்வே..! பங்களா பியூன்கள் பணி நியமனங்கள் ரத்து..!

7 August 2020, 7:41 pm
indian_railways_updatenews360
Quick Share

167 வருட பாரம்பரியமிக்க இந்திய ரயில்வேயின் மூத்த அதிகாரிகளின் இல்லங்களில் டெலிபோன் அட்டெண்டண்ட்-கம்-டக் கலாசிஸ் (டிஏடிகே) என அழைக்கப்படும் பங்களா பியூன்களை வேலைக்கு அமர்த்தும் பிரிட்டிஷ் கால நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் டிஏடிகே’களின் சேவைகளை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரிட்டிஷ் காலத்தின் பாரம்பரியத்தை மறுஆய்வு செய்த ரயில்வே வாரியம், அதிரடியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் இந்த பதவிக்கு புதிய நியமனம் உடனடியாக செயல்படுத்தப்படாது.

அந்த உத்தரவில், “டிஏடிகேநியமனம் தொடர்பான பிரச்சினை ரயில்வே வாரியத்தில் பரிசீலனையில் உள்ளது. எனவே, டிஏடிகே’ஆக புதிய முக மாற்று நபர்களை நியமனம் செய்வது உடனடியாக செயல்படுத்தப்படக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 1, 2020 முதல் இதுபோன்ற நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நியமனங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தப்படலாம். இது அனைத்து ரயில்வே வாரியங்களிலும் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய இந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர், “இந்திய ரயில்வே அனைத்து வகையான முன்னேற்றத்தின் விரைவான பாதையில் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் பணி நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பல நடைமுறைகள் மற்றும் மேலாண்மை கருவிகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அத்தகைய சூழலில் காணப்பட வேண்டும்.” எனக் கூறினார்.

ஆரம்ப 120 நாட்கள் சேவையின் பின்னர் குழு டி பிரிவில் இந்திய ரயில்வேயின் தற்காலிக ஊழியராக டிஏடிகே பதவி கருதப்படுகிறது. மூன்று வருட சேவையை முடித்தவுடன் ஒரு ஸ்கிரீனிங் சோதனைக்குப் பிறகு இந்த பதவி நிரந்தரமானதாக மாற்றப்படுகிறது.

தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்வது, கோப்புகளை தங்கள் அலுவலகங்களிலிருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்வது போன்ற கடமைகளைச் செய்வதற்காக ரயில்வே அதிகாரிகளின் இல்லங்களில் பங்களா பியூன்கள் வைக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக, டிஏடிகே’களை அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

2017’ஆம் ஆண்டில், பியூஷ் கோயல், ரயில்வே அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, ரயில்வே ஊழியர்களை தங்கள் வீடுகளில் வேலை செய்யும் காலனித்துவ கால நடைமுறையை நிறுத்துமாறு மூத்த அதிகாரிகளை வலியுறுத்தினார். பின்னர் சுமார் 10,000 ரயில்வே ஊழியர்கள் 2018 வரை டிஏடிகே’களாக தங்கள் கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Views: - 3

0

0