சீனா, பாகிஸ்தானுடன் இணைந்து போர்ப்பயிற்சி..? காவ்காஸ்-2020’இல் இந்தியாவின் முப்படைகளும் பங்கேற்பு..!

25 August 2020, 11:56 am
Indian_Army_UpdateNews360
Quick Share

காவ்காஸ் -2020 என்ற ஒருங்கிணைந்த முப்படை போர்ப் பயிற்சியில் பங்கேற்பதற்காக செப்டம்பர் மாதத்தில் சுமார் 200 வீரர்களைக் கொண்ட ஒரு முத்தரப்பு சேவையை இந்தியா தெற்கு ரஷ்யாவுக்கு அனுப்புகிறது என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் பல நாடுகளுடன், சீனா மற்றும் பாகிஸ்தான் வீரர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியப் படையில் இராணுவத்தைச் சேர்ந்த 160 வீரர்களும், இந்திய விமானப்படையின் 40 வீரர்களும், இரண்டு கடற்படை அதிகாரிகள் பார்வையாளர்களாகவும் செல்ல உள்ளனர்.

தெற்கு ரஷ்யாவின் அஸ்ட்ராகான் மாகாணத்தில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் உறுப்பு நாடுகள் மட்டுமல்லாது ஈரான், துருக்கி உள்ளிட்ட 18 நாடுகளுக்கு இந்த போர் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டுகளிலும் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இதே போர்ப் பயிற்சியில் இதில் கலந்து கொண்டிருந்தாலும், தற்போது லடாக் எல்லை மோதலால் இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு பக்கம் பதற்றம், ஆர்டிகிள் 370 ரத்துக்கு பிறகு பாகிஸ்தானின் மோசமான நடத்தை காரணமாக உறவு சீர்குலைந்துள்ள சூழ்நிலையில் இந்த போர்ப் பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

Views: - 2

0

0