ஆறு சதவீதத்திற்கும் கீழே வந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..! மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..!

10 November 2020, 12:45 pm
Ministry_of_Health_and_Family_Welfare_UpdateNews360
Quick Share

இந்தியாவின் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, மொத்த நோய்த்தொற்றுகளில் 6 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட ஒரு டிவீட்டில், “ஒரு முக்கிய சாதனையை நிரூபிக்கும் வகையில், இந்தியாவின் செயலில் உள்ள நோய்த் தொற்றுகள் மொத்த எண்ணிக்கையில் 6%’க்கும் கீழே குறைந்துவிட்டன. மீட்கப்பட்ட நோய்த்தொற்றுகள் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 92%’த்தைக் கடந்துவிட்டன.” எனத் தெரிவித்துள்ளது

மற்றொரு ட்வீட்டில், “மத்திய அரசின் அளவீடு செய்யப்பட்ட மற்றும் பயனுள்ள மூலோபாயம், ஆரம்பகால அடையாளங்காட்டலுக்கான உயர் மட்ட சோதனைகளில் கவனம் செலுத்தியது. சரியான நேரத்தில் தடமறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் கடுமையான நிகழ்வுகளுக்கு மருத்துவமனையில் சேர்த்தல் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான மீட்டெடுப்புகளுக்கு வழி வகுத்தது.” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொரோனா நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நேற்று ஆந்திரா, அசாம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காள சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ கான்பெரன்ஸ் கூட்டத்தை நடத்தினார்.

இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் 45,903 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 85,53,657’ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

Views: - 25

0

0