ஆயுத ஏற்றுமதியில் 700% வளர்ச்சி..! உலக அளவில் 19’வது இடத்திற்கு முன்னேற்றம்..! சாதித்த இந்தியா..!

9 September 2020, 6:10 pm
India_Defence_Updatenews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள மத்திய அரசு, இந்தியாவை பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற நீண்டகால லட்சியத்தைக் கொண்டுள்ளது. மேலும் சமீபத்திய தகவல்களின்படி, மத்திய அரசு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாகவே தெரிகிறது.

ஆத்மநிர்பர் பாரத்திற்க்கான பிரதமர் மோடியின் தெளிவான அழைப்பை அதிகரிப்பதற்காக, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆகஸ்டில் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை 2020 என்ற வரைவை ஒரு சிறந்த வழிகாட்டும் ஆவணமாக உருவாக்கியது. இந்தியா பாதுகாப்புத் துறையில் சுயசார்பு மற்றும் ஏற்றுமதி நாடாக மாற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2025’ஆம் ஆண்டளவில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளில் ரூ 35,000 கோடி ஏற்றுமதி உட்பட 1,75,000 கோடி ரூபாய் வருவாயை அடைவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்” என்று பாதுகாப்பு அமைச்சகம் ஆகஸ்ட் 3’ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

இதற்கிடையே 2019’ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகின் சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் இந்தியா தற்போது 19’வது இடத்தில் உள்ளது என்று பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் இன்று தெரிவித்தார்.

“பாதுகாப்பு ஏற்றுமதியில் 2016-17 ஆம் ஆண்டில் ரூ 1521 கோடியிலிருந்து 2018-19 ஆம் ஆண்டில் ரூ 10,745 கோடியாக 700% வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இதன் மூலம் 2019’ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் 19’வது இடத்தைப் பிடித்தது” என்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘பாதுகாப்பு ஏற்றுமதியை ஊக்குவித்தல்’ குறித்த மின் சிம்போசியத்தில் சிடிஎஸ் ராவத் கூறினார்.

Views: - 0

0

0