இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பல் : கடலில் கம்பீர நடைபோட்ட ஐஎன்எஸ் விக்ராந்த்!!

Author: Udayachandran
4 August 2021, 6:41 pm
INS Vikranth - Updatenews360
Quick Share

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை கடலில் செலுத்தி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பல்தான் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல். இந்த கப்பல் இந்திய கடற்படைக்காக கொச்சி சிப்யார்டு நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த கப்பலுக்கான வடிவமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கப்பலின் அடிப்பாகம் 2009 பிப்ரவரி மாத்ததில் அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் மிக் வகையை சார்ந்த 24 போர் விமானங்களை நிறுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டது.

இந்த நிலையில் முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பல்தான் ஐஎன்எஸ் விக்ராந்த் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி இந்த கப்பலை அடுத்த ஆண்டு கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

Views: - 280

0

0