16,000 அடி உயரத்தில் எட்டு மணி நேரம் சாகசம்..! ருஸ்டம் II ட்ரோன் சோதனை வெற்றி..! டிஆர்டிஓ அசத்தல்..!

Author: Sekar
10 October 2020, 2:52 pm
RUSTAM_II_UpdateNews360
Quick Share

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நேற்று உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ருஸ்டோம்- II ட்ரோனை வெற்றிகரமாக சோதனை செய்தது.

இந்த ட்ரோன் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் 16,000 அடிக்கு மேல் உயரத்தில் எட்டு மணி நேரம் பறக்க விடப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் 2020’ஆம் ஆண்டின் இறுதிக்குள் 26,000 அடி உயரத்தில் 18 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் வகையில் மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சோதனை விமான உச்சவரம்பை எட்டு மணிநேரம் முடித்த பின்னரும் ட்ரோன் மேலும் ஒரு மணிநேரம் பறக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்தது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ட்ரோன் செயற்கை துளை ரேடார், மின்னணு நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வு அமைப்புகள் உள்ளிட்ட பலவிதமான பேலோடுகளைச் சுமக்கும் திறன் கொண்டது. முக்கிய தகவல்களை நிகழ்நேர அடிப்படையில் வெளியிடுவதற்கான செயற்கைக்கோள் தொடர்பு இணைப்பையும் இது கொண்டுள்ளது.

இஸ்ரேலிய ஹெரான் ஆளில்லா விமானத்திற்கு இணையாக டிஆர்டிஓ ருஸ்டோம் -2 ட்ரோனை உருவாக்கி வருகிறது. இது ஏற்கனவே இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றால் பயன்படுத்தப்பட்டாலும் இன்னும் பல சோதனைகள் நடத்தி ட்ரோனை தொடர்ச்சியாக டிஆர்டிஓ மேம்படுத்தி வருகிறது.

கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் செலவில் அமெரிக்காவிலிருந்து சுமார் 30 ஆயுதமேந்திய ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், டிஆர்டிஓவின் இந்த வெற்றிகரமான சோதனை முக்கியத்தியத்துவம் பெறுகிறது.

Views: - 53

0

0