இந்தியாவுடனான எல்லையை இழுத்து மூடிய பூட்டான்..! வர்த்தகமும் ரத்து..! பரபரப்புப் பின்னணி..!

12 August 2020, 6:19 pm
Bhutan_India_Border_Town_UpdateNews360
Quick Share

பூட்டானில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டதை அடுத்து, மேற்கு வங்கத்தின் அலிபுர்துர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பூட்டான் எல்லையில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

நேற்று பூட்டானில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பின்னர் இந்தியாவின் ஜெய்கான் மற்றும் பூட்டானின் ஃபூன்ட்ஷோலிங் இடையேயான எல்லை வாயில்கள் மூடப்பட்டதாக அலிபுர்துர் மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“ஜெய்கான் வழியாக எல்லை வர்த்தகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.” என்று அவர் மேலும் கூறினார்.

மேற்கு வங்காளத்தின் மூன்று மாவட்டங்களான அலிபூர்துர், ஜல்பைகுரி மற்றும் கலிம்பொங் பூட்டானுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டாலும், பூட்டானுடனான வர்த்தகத்தின் முக்கிய பகுதி ஜெய்கான்-ஃபியூன்ட்ஷோலிங் பிரிவு வழியாகவே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து எல்லை நகரமான ஜெய்கானுக்கு மேற்கே 150 கி.மீ தொலைவில் வடகிழக்கு இந்திய மாகாணங்களை மற்ற இந்திய பகுதிகளுடன் இணைக்கும் சிலிகுரி அமைந்துள்ளது.

Views: - 8

0

0