எல்ப்ரஸ் மலையில் கம்பீரமாக பறந்த இந்திய தேசியக்கொடி… சுதந்திர தினத்தையொட்டி 15 மாத குழந்தையின் தாய் செய்த சாதனை…!!

Author: Babu Lakshmanan
15 August 2022, 10:22 pm
Quick Share

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா தன் 15 மாத குழந்தையை விட்டு பிரிந்து வந்து எல்ப்ரஸ் மலையில் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டு சாதனையை படைத்துள்ளார்.

இந்திய மலையேற்ற வீராங்கனையான பாவனா டெஹாரியா ஐரோப்பாவின் மிக உயரமான மலைசிகரமான எல்ப்ரஸ் மலையில், இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டு சாதனை படைத்தார்.

மத்தியப் பிரதேசம் – சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள தமியா என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த டெஹாரியா என்ற 30 வயதான பெண்மணி, ஆகஸ்ட் 15ம் தேதி மலைசிகரத்தை அடைய சரியாக திட்டமிட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரஷியா-ஜார்ஜியா எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பாவின் 5,642 மீட்டர் உயரமான சிகரத்தில், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்காக பயணித்துள்ளார் இந்த வீர மங்கை.

சில நேரங்களில் அங்கு வெப்பநிலை மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் பயங்கர வேகமாக காற்று வீசும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அவர் இதற்காக பல நாட்கள் பயிற்சி பெற்றதாக கூறினார். மேலும் தன்னுடைய 15 மாத குழந்தையை விட்டு பிரிந்து வந்து இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

Views: - 481

0

0