பிஎம் கேர்ஸ் நிதிக்கு வந்த முதல் நன்கொடை மோடியுடையதா..? எவ்வளவு தொகை கொடுத்தார் தெரியுமா..?

3 September 2020, 5:14 pm
Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தை கல்வி திட்டம் முதல் கங்கையை சுத்தம் செய்வது வரை பல திட்டங்களுக்கு அவரது சேமிப்பு மற்றும் அவர் பெற்ற பரிசுகளின் ஏலத்தின் வருமானம் ரூ 103 கோடிக்கு மேல் பல பொது காரணங்களுக்காக அளித்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரது நன்கொடைகளில் சமீபத்தியது கொரோனாவுக்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதிக்கு ஆரம்ப தொகையாக வழங்கிய 2.25 லட்ச ரூபாய் ஆகும். இது பொது சுகாதார அவசரநிலை அல்லது வேறு எந்த வகையான அவசரநிலை தொடர்பான எந்தவொரு நிவாரணத்திற்கும் ஆதரவாக கொரோனா வெடித்ததை அடுத்து அமைக்கப்பட்டது.

மார்ச் மாதத்தில் அமைக்கப்பட்ட இந்த நிதி, உருவாக்கப்பட்ட ஐந்து நாட்களில் ரூ 3,076.62 கோடியைப் பெற்றது என்று நேற்று பகிரங்கமாக வெளியிடப்பட்ட கணக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது காரணங்களுக்காக மோடியின் நன்கொடைகளை எடுத்துரைத்து, கும்பமேளாவின் துப்புரவுத் தொழிலாளர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட கார்பஸ் நிதிக்கு அவர் தனது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து 2019’ல் ரூ 21 லட்சம் கொடுத்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.

2019’ல் தென் கொரியாவில் சியோல் அமைதி பரிசு பெற்ற பின்னர், கங்கை நதியை சுத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்ட நமாமி கங்கை திட்டத்திற்கு ரூ 1.30 கோடி முழு பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி பல பொது காரணங்களுக்காக பங்களித்துள்ளார். இந்த நன்கொடைகள் இப்போது ரூ 103 கோடியை தாண்டிவிட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் பிரதமராக மோடி பெற்ற நினைவுச் சின்னங்களை ஏலம் விட்ட போது கிடைத்த ரூ 3.40 கோடி வசூலிக்கப்பட்டு நமாமி கங்கை திட்டத்திற்காக நன்கொடை அளிக்கப்பட்டது.

நாட்டின் பிரதமராக பதவியேற்பதற்காக 2014’ல் மாநில முதல்வராக பதவி விலகிய பின்னர் மோடி தனது தனிப்பட்ட சேமிப்பிலிருந்து ரூ 21 லட்சத்தை குஜராத் அரசு ஊழியர்களின் மகளின் கல்விக்காக நன்கொடையாக வழங்கியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக முதலமைச்சராக அவர் இருந்த போது தனக்கு கிடைத்த அனைத்து பரிசுகளையும் ஏலம் விடுவதன் மூலம் ரூ 89.96 கோடியை திரட்டியதோடு, பெண் குழந்தைகளின் கல்விக்கான திட்டமான கன்யா களவணி நிதிக்கு நன்கொடை அளித்தார்.

Views: - 9

0

0