இந்தியா தயாரிக்கும் ஐஎன்எஸ் விக்ராந்த் அடுத்த ஆண்டு அர்ப்பணிப்பு : அமைச்சர் ராஜ்நாத்சிங்

Author: Babu Lakshmanan
25 June 2021, 4:42 pm
rajnath singh - updatenews360
Quick Share

இந்தியா தயாரித்துள்ள முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

கொச்சி கடற்படைத் தளத்தில் இந்தியா தயாரிக்கும் முதல் விமானந்தாங்கி கப்பல் ஐஎன்ஸ் விக்ராந்தின் கட்டுமானப் பணிகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரில் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “இந்தியா தயாரித்துள்ள முதல் விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு கற்படையில் இணைக்கப்படும். இந்த கப்பல் இந்தியாவின் பெருமை. சுயசார்பு இந்தியாவின் சிறந்த உதாரணம்,” என்றும் குறிப்பிட்டார்.

அதன்பின்னர் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் ராஜ்நாத் சிங் மதிய உணவு அருந்தினார்.

Views: - 199

0

0