குளிர் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா?…மத்திய அமைச்சர் பதில்…!!

Author: Aarthi
11 October 2020, 4:41 pm
harsh - updatenews360
Quick Share

இந்தியாவில் குளிர் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? என்ற கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி: ஞாயிற்றுக்கிழமைகளில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில், இந்தியாவில் குளிர் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

Cbe Corona - Updatenews360

இதற்கு பதில் அளித்த ஹர்ஸ்வர்தன், SARS Cov 2 சுவாசம் தொடர்பான வைரஸ், எனவே, குளிர் காலத்தில் சுவாசம் தொடர்புடைய வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது அறிந்த ஒன்றுதான்.

இந்த வைரஸ்கள் குளிர்ச்சியான கால சூழலில், நீண்ட காலம் வாழும் ஆற்றல் படைத்தது. குளிர்காலத்தில், குடியிருப்பு வீடுகளில் கூட்டம் அதிகமாக இருப்பது வைரஸ் பரவலை அதிகரிக்கும்.

ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக இங்கிலாந்தில் குளிர்கால தொடக்கத்தில் தொற்று பாதிப்பு உயர்வதை மேற்கோள் காட்டிய ஹர்ஷ்வர்தன், இந்தியாவிலும் குளிர் காலம் தொடங்க உள்ளதால் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.

Delhi Corona- Updatenews360

டெல்லியில் குளிர் காலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரம் எண்ணிக்கையை எட்டும் என்று தேசிய நோய் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பண்டிகை காலங்களும் நெருங்கியுள்ளதால், தொற்று பாதிப்பு திடீரென உயர வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 44

0

0