காதலுக்காக திருடனாக மாறிய இளைஞர் : காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க I Phone திருட்டு.. கம்பி எண்ணும் காதலன்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2021, 8:10 pm
I Phone Theft - Updatenews360
Quick Share

டெல்லி : காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக ஐபோனைக் கொள்ளையடித்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 23 அன்று மேற்கு டெல்லியில் உள்ள ஒரு பூங்காவில் இருந்த நபரின் கழுத்தில் கத்தியை வைத்து அவரிடம் இருந்த ஆப்பிள் ஐபோனை இரு நபர்கள் சேர்ந்து கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு கொள்ளையர்கள் துவாரகா செக்டார் 14 பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதாக புதன்கிழமையன்று இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் வலைவீசி குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐபோன் மீட்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, இரண்டு திருடங்களில் ஒருவரின் காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக தான் இந்த குற்றத்தை செய்ததாகவும், சில மலைப்பிரதேசங்களுக்குச் செல்வதற்காக தாங்கள் மற்றொரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

Views: - 251

0

0