“Diamond Exchange“ என்ற செயலி மூலம் ஐ.பி.எல் சூதாட்டம் : 8 பேர் கைது!!

Author: Udayachandran
7 October 2020, 6:35 pm
IPL gambling Arrest - Updatenews360
Quick Share

ஆந்திரா : கடப்பா மாவட்டத்தில் ஐபிஎல் 20 20 சூதாட்டம் நடத்திய 8 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 8 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம், 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் ஐ.பி.எல் சூதாட்டம் நடத்துவது பற்றிய தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி அன்புராஜன் உத்தரவின் பேரில் போலீசார் இன்று பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது “டைமண்ட் எக்சேஞ்“ என்ற பெயரிலான செயலி மூலம் பந்தயம் கட்டுபவர்களை ஒருங்கிணைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடத்திய ஷேக் முகமது, விஜய், ராஜசேகர், ஹுசேன் பாஷா, ரெட்டப்பா, ஷேக் பாதூர், ஸ்ரீனிவாச ரெட்டி, வெங்கட் ரெட்டி ஆகிய 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 8 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம், ஐந்து செல்போன்கள், 20 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Views: - 47

0

0