தொடரும் ஐபிஎல் சூதாட்டம்: 8 பேர் கைது…!!

Author: Aarthi
11 October 2020, 8:45 am
gambling - updatenews360
Quick Share

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் மீது மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகர் பகுதியில் சூதாட்டம் நடைபெற்றுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த இந்தூர் நகர பத்கங்கா காவல் நிலைய போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். இதில், ஐ.பி.எல். போட்டிகளின் மீது சூதாட்டம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட சூரஜ், ராகுல், நிலேஷ், யோகேஷ், விஷால், ராகுல், சந்தீப் மற்றும் சுபம் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 8 மொபைல் போன்கள், டிவி, ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் பணம் ஆகியவற்றையும் பறிமுல் செய்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 44

0

0