உலகமே கொரோனாவின் அச்சத்தில் இருக்கும் போது…, ஹை-டெக் வசதியில் கஞ்சா வளர்த்த வெளிநாட்டினத்தவர் கைது…!

27 March 2020, 10:55 am
Quick Share

சீனாவில் உருவெடுத்த கொடூர கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 24000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். ஐந்தரை லட்சமக்களை தாக்கியுள்ளது. இந்நேரத்தில் இந்தியாவில் அடுத்த 20 நாட்களுக்கு மக்களை ஊடரங்கு காக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார், இந்நேரத்தில்,,,


இஸ்ரேல் நாட்டிலிருந்து இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் நகரத்திற்கு வந்து வாழ்ந்துவருபவர் ஆலன் மொள்ளெ. இவர் அங்கிருக்கும் ஒரு அடுக்குமாடிகட்டிடத்தில் 14 ஆம் மாடியில் ஒரு வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்துவந்தார். இந்த ஊடங்கு நேரத்தில் இவருடைய வீட்டில் மட்டும் 24 மணிநேரமும் லைட் எரிந்து வந்ததால் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி அவருடைய வீட்டிற்கு சென்றார்.


அப்போது அங்கு வீடுமுழுவதும் மிகவும் தொழில்நுட்ப தொலைநோக்கு பார்வையுடன் ட்ரிப் நீர்ப்பாசன வழிமுறையில் டியூப் லைட்டிற்கு கீழ் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. உடனே அந்த போலீஸ் அதிகாரி தலைமை காவல் அலுவலகத்திற்கு தகவலை அனுப்பி அந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.