திருப்பதியில் இஸ்ரோ சிவன் : நாளை பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தும் நிலையில் தரிசனம்!!!

27 February 2021, 10:34 am
Isro Sivan -Updatenews360
Quick Share

ஆந்திரா : நாளை பிஎஸ்எல்வி 51 ரக ராக்கெட் செலுத்த உள்ள நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நாளை பிஎஸ்எல்வி சி 51, பிரேசில் நாட்டின் அமாசோனா 1 மற்றும் 18 பயணிகள் இணை விண்கலங்கள் ஆகியவற்றை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் ஆலோசனைப்படி நாளை 18 பயணிகள் இணை வின்கலங்கள் உட்பட இருவது விண்கலங்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. இது இஸ்ரோவின் வரலாற்றில் மிக முக்கியமான செயல்பாடாகும் என்று குறிப்பிட்டார்.

Views: - 11

0

0