வெளிநாட்டு நிதி ரியல் எஸ்டேட்டில் முதலீடு..! கோடிகளில் குளித்த கேரள பாதிரியார்..!

9 November 2020, 10:48 am
KP_Yohannan_updatenews360
Quick Share

பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் அமைப்பின் தலைவரான கேரள பாதிரியார் கே.பி.யோஹன்னனுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறையின் சோதனையில், கணக்கில் கடப்படாத பணம் மற்றும் வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியது போன்ற பல திடுக்கிடும் குற்றங்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனையில், திருச்சபை மத நோக்கங்களுக்காக பெறப்பட்ட தொண்டு நிதியை திருப்பி விடுகிறார்கள் என்பது தெரியவந்தது.

அக்டோபர் 6’ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை கேரளாவிலும் நாட்டின் பிற இடங்களிலும் தொடர்கிறது. இதுவரை, பல்வேறு வளாகங்களில் இருந்து ரூ 8 கோடி ரொக்கத்தை மீட்டுள்ள நிலையில் சோதனை தொடர்வதால் இன்னும் பல விசயங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த பரிவர்த்தனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேவாலயத்தில் பல ஆண்டுகளாக சுமார் 4,000 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்றும் அதன் ஒரு பகுதி நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளுக்கு சென்றது என்றும் கூறப்படுகிறது.

“நாங்கள், முதன்மையாக, தேவாலயம் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் என்று கருதுகிறோம். தேவாலயங்களை நடத்துவதற்கு தொண்டுக்கான நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மத நோக்கமாகும்.” என்று அஒரு அதிகாரி கூறினார்.

“விற்பனை ஒப்பந்தங்கள் போன்ற தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளின் விலையையும் இந்த குழு உயர்த்தியுள்ளது. இது நன்கொடைகளில் பெறப்பட்ட பணம் அறக்கட்டளைகளின் செயல்பாடுகளுக்கு செலவிடப்படுவது போல் தோன்றுகிறது.” என்று அக்டோபர் 7 அன்று வருமான வரித்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Views: - 24

0

0