மேம்பாலம் கட்டியதில் ஊழல்..! கேரள முன்னாள் அமைச்சர் இப்ராஹிம் குஞ்சு கைது..!

18 November 2020, 6:50 pm
IUML_Kunju_UpdateNews360
Quick Share

கேரளாவில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் ஆட்சியின் போது, மேம்பாலம் கட்டுவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் கேரள முன்னாள் அமைச்சரும், ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ.வுமான வி.கே. இப்ராஹிம் குஞ்சு இன்று கைது செய்யப்பட்டார்.

இப்ராஹிம் குஞ்சு ஒரு தனியார் மருத்துவமனையில் சில வியாதிகளுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மருத்துவமனையில் வைத்தே, ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதை பதிவு செய்வதற்கு முன்பு ஊழல் தடுப்பு அதிகாரிகள் குழு மருத்துவமனை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, மேம்பால வழக்கு தொடர்பாக எம்.எல்.ஏ.வாக இருக்கும் இப்ராஹிம் குஞ்சுவை அதிகாரிகள் பல முறை விசாரித்தனர்.

உம்மன் சாண்டி தலைமையிலான முந்தைய யுடிஎஃப் அரசாங்கத்தில் இப்ராஹிம் குஞ்சு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, கட்டப்பட்ட பாலத்தின் மோசமான தரத்திற்கு தான் காரணம் என்ற குற்றச்சாட்டை அவர், அரசியல் நோக்கம் கொண்டது எனக் கூறி நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேம்பாலத்தை மீண்டும் பினராயி விஜயன் தலைமையிலான கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Views: - 30

0

0